"அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ" - ஜெயக்குமார்

 
tn

அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

tn

 அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்து இருந்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.அதில் அதிமுக பொது குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நீதிபதிகள் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்ந்து செயல்படுவார். அத்துடன் அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்ற முடிவு கிடைத்துள்ளது. இந்த சூழலில்  இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தற்போது இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்

jayakumar

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை அடுத்து அமைச்சர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்பதை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ. அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும்.தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்  என்றார்.