பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் ஓபிஎஸ்!

 
Ops

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி  திங்கள் ஓ.பன்னீர்செல்வம்  மேல்முறையீடு செய்கிறார்.

ops

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ . பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர் மோகன் மற்றும் துரைசாமி அமர்வு கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொது குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் கட்சியிலிருந்து ஓ .பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது தொடரும் என்றும் எடப்பாடி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

tn

இந்நிலையில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செப்டம்பர் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்கிறார். ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என நீதிமன்றத்தில் முறையிடவும் ஓபிஎஸ் தரப்பு  திட்டமிட்டுள்ளது.