ஒற்றை தலைமை விவகாரம் - 3வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை!!

 
ops

 ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக, 3வது நாளாக ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

admk

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனை ஓங்கியுள்ளது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்சிக்குள் தற்போதுள்ள சூழலில் ஈபிஎஸ் கை  ஓங்கியுள்ளதால் . ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விடுவாரோ? என்ற அச்சம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர்கள் ஒட்டி தங்கள் விருப்பத்தை கூறி வருகின்றனர்.இதனிடையே கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவர் வீட்டிலும் தனித்தனியே முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. 
admk

இந்நிலையில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லத்தில் 3வது நாளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை உள்ள இல்லத்தில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக, 3வது நாளாக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

admk office

இதனிடையே சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். பொதுக்குழு, செயற்குழு தீர்மானம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஜெயக்குமார், செம்மலை, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், வைகை செல்வன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.