#Breaking அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்; தொண்டர்கள் காயம்!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் அதிமுக அலுவலகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனர் . கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளதால் ஓபிஎஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தன்னையும், கட்சியையும் யாரும் பிரிக்க முடியாது. தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் தான் எடப்பாடி பழனிசாமியுடன் கை கொடுத்தேன் என்று சமீபத்தில் ஓபிஎஸ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அத்துடன் ஒற்றை தலைமை என்ற கருத்தை வெளிப்படையாக பேசியது ஜெயக்குமார் தான் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் காரணமாக நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதிமுக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். அத்துடன் ஜெயக்குமார் கட்சியை அழிக்க திட்டமிட்டுள்ளதாக கூறி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் முழக்கமிட்டனர். அதேசமயம் மோதலில் காயமடைந்த தொண்டர் ரத்தக்கறையுடன் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மோதல் தொண்டர்கள் காயமடைந்துள்ளனர் மோதலில் காயமடைந்த தொண்டர்களுடன் ஒற்றை தலைமை தொடர்பாக உட்கட்சி பூசல் வெடித்ததால் அதிமுக அலுவகத்தில் அடிதடி ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தொண்டர்களிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த தொண்டர்கள் ரத்தக்காயத்துடன் வெளியே வந்ததால் பரபரப்பு உண்டாகியுள்ளது. “எடப்பாடி ஆதரவாளரா? என கேட்டு கேட்டு தாக்கினர்” என்று பெரம்பூர் அதிமுக நிர்வாகி மாரிமுத்து கூறியுள்ளனர்.ஒற்றை தலைமை பிரச்னை அடிதடி வரை சென்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.