தொற்று குறைந்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய உத்தரவு

 
ர

 கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் கட்டுப்பாடுகளை ரத்து செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் செய்திருக்கிறது.   இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார்.

 அந்த கடிதத்தில்,   இந்தியாவில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகின்றது.   அந்த வகையில் கடந்த வாரம் சராசரி எண்ணிக்கை குறைந்துவிட்டது. கொரோனா தொற்று  பரவும் விகிதம் உலக அளவிலும் , இந்திய அளவிலும் மாற்றமடைந்து வருவதையடுத்து தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்க இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

ரா

 அவர் மேலும் அக்கடிதத்தில்,    ஒரு சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் கொரோனா உச்சத்தை தொட்டதை தொடர்ந்து கடுமையான சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன .   குறிப்பாக மாநில எல்லைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.   அங்கும் கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.  அதேநேரம்  கூடுதல் கட்டுப்பாடுகளால் மக்களின் நடமாட்டம் ,  பொருளாதார நடவடிக்கைகள் தடைபடக்கூடாது.  

 கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்து திருத்தங்கள்.   அல்லது ரத்து செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.