அசைவ உணவகங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்த உத்தரவு

 
hotel

தமிழகத்தில் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்த அனைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது.

பெருமளவில் கெட்டுபோன அசைவ உணவுகள் கண்டறியபடுவதன் எதிரொலியால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வித் துறை சார்பில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கான மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தின்போது சென்னை மண்டல நியமன அலுவலர் மருத்துவ சதீஷ் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை  நியமன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் தற்போது ஷவர்மா, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கெட்டுப் போவதாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் கண்டறியப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

ma Subramanian

ஏற்கனவே கேரள மாநிலத்தில் ஷவர்மா அசைவ உணவுகள் சாப்பிட்டாதல் உயிர்சேதம்  கண்டறியப்பட்ட நிலையில் தமிழகத்தில் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்த அனைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்த பட்டுள்ளது. மேலும் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்கள் பெருமளவில் செயற்கை முறையில் பழுக்க வைக்க படக்கூடிய காட்சிகள் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது எனவே அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தீவிர சோதனை செய்வது அபராதம் விதிப்பது சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.