பொங்கல் பரிசு - அரிசி மற்றும் சக்கரையுடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்குதலுக்கான ஆணை!!

 
govt

தமிழர்த் திருநாள் தைப்பொங்கல் 2023 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000  ரொக்கப்பணம் வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

pongal

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர், மேலும், 2023ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு மொத்தம் 2,1933,342 பயனாளிகளுக்கு (அரிசி குடும்ப அட்டைதாரரிகள். 219,14,073 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் 10,209) தலா 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம்   பொங்கல் பரிசினை மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு (அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 219,14,073. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள்-19,269) வழங்குவதற்கு ரூ.2356,67,17,978/- நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யுமாறும், பொங்கல் பரிசில் குறிப்பிடப்பட்டுள்ள பச்சரிசியை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலமும் (NCCF), சர்க்கரையை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் மூலமும் கொள்முதல் செய்திட அனுமதி அளிக்குமாறும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக நிர்வாக இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.

tn govt

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக நிர்வாக இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று, 2023 ஆம் ஆண்டு தமிழர்த்திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட ஏதுவாக பொங்கல் பரிசு தலா 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணத்தினை மொத்தம் 219,33,342 பயனாளிகளுக்கு (அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 2,19:14,073. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள்-19,269) செலவினத் தொகையான ரூ.2356,67,17,978/- (ரூபாய் இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு கோடியே அறுபத்தேழு இலட்சத்து பதினேழாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தெட்டு மட்டும்) வழங்கியும். மேலும், பொங்கல் பரிசில் குறிப்பிடப்பட்டுள்ள பச்சரிசியை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலமும் (NCC) சர்க்கரையை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் மூலமும் கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநருக்கு அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது.