புரட்டிப்போட்ட புயல்.. காசிமேடு துறைமுகத்தில் 100 படகுகள் சேதம்..

 
புரட்டிப்போட்ட புயல்.. காசிமேடு துறைமுகத்தில் 100 படகுகள் சேதம்..

மாண்டஸ் புயலால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 விசைப்படகுகள்  கடலில் மூழ்கி சேதமடைந்தன.  

 மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மெரினா, கோவளம்  உட்பட கடலோர பகுதிகளில்  மணிக்கு 75 கி.மீ வேகத்தில்  சூறைக்காற்று வீசியிருக்கிறது.  அத்துடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதம் ஏற்பட்டன. அந்தவகையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நீரில் மூழ்கியுள்ளன.  100 விசைப்படகுகள் சேதமடைந்ததாகவும்,   படகுகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளவை என்றும் கூறப்படுகிறது.  விசைப்படகுகள் மூழ்கியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் கவலை  தெரிவித்துள்ளனர்.

புரட்டிப்போட்ட புயல்.. காசிமேடு துறைமுகத்தில் 100 படகுகள் சேதம்..

இதனையடுத்து  விசைப்படகுகள் சேதம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மீன்வளத்துறை இயக்குநர் பழனிசாமி, இணை இயக்குநர் ரீனா உள்ளிட்டோர் சேதமடைந்த படகுகள், படகில் வைக்கப்பட்டு இருந்த ஐஸ் பெட்டி, உணவு பொருட்கள், வலைகளையும் பார்வையிட்டனர்.   சேதமடைந்த படகுகளை மறு கட்டமைப்பு செய்யவும், மூழ்கிய படகுகளுக்கு முழுமையாகவும்  இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  அதுமட்டுமின்றி, கடன் பெற்று கட்டப்பட்ட படகுகள் சேதமடைந்து அல்லது மூழ்கியிருந்தால்  அதற்கான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.  

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கோரைக்குப்பம் மீனவக்கிரமத்திலும்  சுமார் 20 வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மக்கள் வெகுவாக  பாதிக்கப்பட்டனர். கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள், 40 இன்ஜின்கள், மீன்பிடி வலைகள் சேதமடைந்த  நிலையில் நிவாரணமும், மாற்று இடமும்  வழங்க அரசு முன்வர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.