மேகதாது பிரச்சினைக்கு அண்ணாமலை கர்நாடகாவில் போராடுவாரா? - அன்புமணி கேள்வி

 
anbumani

மேகதாது பிரச்சினைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் போராடுவாரா? என பாமக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.  
 
சேலத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மாலை  பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  சேலம் வந்தார். சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: புதிய செயல் திட்டத்தை வெளியிட்டு உள்ளோம். கல்வி. சுகாதாரம், சுற்று சூழல், ' மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட போன்ற அனைத்தையும் முன்னிறுத்தி கட்சியை வழி நடத்து வேன். நேர்மையான வழியில் சென்று மக்களுக்கு உழைப்பேன். மேட்டூர் உபரி நீர் திட்டம் முக்கியமான திட்டம். மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.  5 டிஎம்சி தண்ணீரை சேலம் மாவட்டத்திற்கு திருப்பி விட வேண்டும். 5 டிஎம்சி தண்ணீரை அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும். கடுமையான இயற்கை சீற்றம் வர உள்ளது. இதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய நிதி ஒதுக்கி திட்ட மிட வேண்டும். அடுத்த 50 ஆண்டுக்கு திட்ட மிடப் பட வேண்டும். மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முழுமையாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

anbumani

இரும்பாலையில் நிலம் கொடுத்தவர்களுக்கு அந்த நிலங்களை திருப்பி தர வேண்டும். 3 ஆயிரம் ஏக்கர் நிலம் சும்மா உள்ளது. இதை பயன்படுத்த வேண்டும். ஏற்காடு மலை அடிவாரத்தில் குப்பைகள் எரிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். ஆன் லைன் கேம்ளிங் தடுக்க வேண்டும். போதை பழக்கம் அதிகரித்து உள்ளது. காவல் துறை தெரிந்தே கஞ்சா விற்கிறார்கள். முதலமைச்சரை சந்தித்து இது பற்றி தெரிவித்து உள்ளேன். குண்டர் சட்டத்தில் போட நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டு உள்ளேன். ஆளுனரை சந்தித்த போது ஆன்லைன் கேம்பிளிங் பற்றி கூறினேன்.  9 மாதத்தில 40 பேர் இறந்து உள்ளனர். உலகில் அதிகம் விளையாடுவது இந்தியாவில் அதிகம்.  இதை தடுக்க சட்டம் உடனே நிறை வேண்டும். மதுவிலக்கை கொண்டு வர பல போராட்டம் நடத்தி இருக்கிறோம். அரசுக்கு 40 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுவால் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடனே முதலமைச்சர் மது விலக்கை கொண்டு வர வேண்டும். பாரையும் மூட வேண்டும். கலைஞர் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். சமூக நீதிக்காக பல போராட்டங்களை நடத்தி பல மாற்றங்களை கொண்டு வந்தவர்.இந்தியாவில் தலை சிறந்த தலைவர். அவரை நாம் போற்று வோம்.

நீட் தேர்வு காங்கிரஸ் கொண்டு வந்தது. பா.ஜ. ஆதரவு தெரிவித்தது. 9 லட்சத்து 15 ஆயிரம் ரேங் வாங்கியவர் MBBS படித்து வருகிறார். 120 மார்க் எடுத்தவர் படித்து வருகிறார். முன்பு இது போல் இல்லை. அந்த மாணவருக்கு என்ன தகுதி இருக்கும். 430 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவன் படிக்க முடியலை. 
நீட் பயிற்சி நடத்தி பணம் பறித்து வருகிறார்கள். 1 லட்சம் கோடி பறிக்கப்படுகிறது. ஏழை மாணவர்கள் கிராம மாணவர்கள் படிக்க முடிய வில்லை.
மாணவ மாணவிகள் தற்கொலை செய்வதை தடுக்க வேண்டும் . 5 ஆண்டு அல்லது 10 ஆண்டு விலக்கு தர வேண்டும் .அதற்குள். மாணவ மாணவிகள் தகுதி பெற்று விடுவார்கள். மத்திய மாநில அரசுகள் நன்மை செய்தால் பாராட்டு வோம். தவறு செய்தால் சுட்டி காண்பிப்போம். நேற்று முதலமைச்சர் கவர்னரை சந்தித்து உள்ளார். தமிழக பிரச்சினைகளை தாமதம் இல்லாமல் கவர்னர் செய்து தர வேண்டும்.பாஜக இந்தியாவில் பெரிய கட்சி. தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.  மேகதாது பிரச்சினைக்கு அண்ணாமலை கர்நாடகாவில் போராடுவாரா?  அந்த திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என அவர் கூறுவாரா? தெளிவான தீர்ப்பு உள்ளது. இதை மீறி கட்டுவோம் என்கிறார்கள். நீருக்கு போராடுங்கள். தேவைக்கு அரசியலில் போராட வேண்டும்.