தமிழக அரசியலில் பரபரப்பு...பாமக எந்த கூட்டணியிலும் இல்லை - அன்புமணி பேட்டி

 
anbumani

பாமக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. இதேபோல் பாஜகவும் தனித்தே போட்டியிட்டது. இந்நிலையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை தற்போத அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பாமக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 
 
மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: தற்போது பா.ம.க. எந்த கூட்டணியிலும் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்துதான் போட்டியிட்டோம். கூட்டணி பற்றி பாராளுமன்ற தேர்தலின்போது முடிவெடுக்கப்படும். எங்களுடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது தான். அதற்கு ஏற்ப யுக்திகளையும், வியூகங்களையும் 2024 பாராளுமன்ற தேர்தலின்போது எடுப்போம். இவ்வாறு கூறினார்.