"நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்திட வேண்டும்" - சசிகலா

 
sasikala

நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக அரசு திறந்திட வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார். 

paddy

 மதுரை புறநகர் போடிநாயக்கன்பட்டி, கட்டன்குளம்,வடுகப்பட்டி,நெடுங்குளம் ஆகிய பகுதிகளில்   இலட்சக்கணக்கான மூட்டைகள் நெல்கொள்முதல் செய்யப்படாமலும்,திறந்த வெளியிலும், நீர்நிலைப்பகுதிகளிலும் கொட்டிக்கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசின் அலட்சிய போக்கால் மதுரை,திருச்சி, தேனி, திருவாரூர்,சிவகங்கை,விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

tn

இந்நிலையில் சசிகலா தனது ட்விட்டர் பாக்கத்தில், "மதுரை செக்காணூரணி அருகே அ.கொக்குளம், கிண்ணிமங்கலம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திடீரென்று எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் கடந்த ஒரு மாத காலமாக அறுவடையான 5000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திமுக தலைமையிலான அரசு ஓராண்டில் இதை செய்தேன் அதை செய்தேன் என்று அரசு பணத்தை வீணாக்கி விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.