ஆங்கிலத்தில் பட்ஜெட்டை வாசித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 
tn

தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மை திட்டங்களால் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியரகராஜன் தெரிவித்துள்ளார்.

2022-23 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். பட்ஜெட் உரையில் காவல்துறைக்கு 10 ஆயிரத்து 285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளில் விளைவாக அங்கீகரிக்கும் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்க சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு இரண்டு இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.  தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூபாய் ஏழு கோடி ஒதுக்கீடு,  விழுப்புரம் ராமநாதபுரத்தில் 10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு,  தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் கீழடி சிவகங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாய்வு நடைபெறும் என்றும் நிதியமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

tn
அத்துடன் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு, மகளிர் இலவச பயணத்திற்கு பயணத்தை மேற்கொள்ள மானியமாக ஆயிரத்து 520 கோடி ஒதுக்கீடு ஆகியவை பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க, புனரமைக்க ₹12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை வெஸ்லி தேவாலயம், நெல்லை கால்டுவெல் தேவாலயம், சென்னை நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி மற்றும் நாகூர் தர்கா ஆகியவை புனரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rn

இந்நிலையில் மாநிலத்தின் நிதிநிலை குறிப்புகள் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினால் தேசிய மற்றும் உலக அளவிலுள்ள ஊடகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சென்று சேரும் என்பதற்காக சில குறிப்புகளை ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறேன் என்று குறிப்பிட்டு ஆங்கிலத்தில் பட்ஜெட்டை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதியான பயனாளர்களை கண்டறியும் பணிகள் முழு மூச்சாக நடந்துவருகின்றன.மாநில நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.