அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரன் நியமனம் - ஓபிஎஸ் அறிவிப்பு

 
tn

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரன் நியமனம்  செய்யப்படுவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.

 

tn

அதிமுகவில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் பிரச்சனை தலைதூக்கி உள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி என்பதை நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓபிஎஸ் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.  அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் 30-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  இந்த சூழலில் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் முக்கிய அறிவிப்பு - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

tn

பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியார் முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை அனைவரிடமும் பயணித்தவர்.தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் அவரை கட்சி ஆலோசராக ஓ பன்னீர்செல்வம் நியமித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.