பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக - தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்!!

 
vaiko ttn

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

teachers

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளிகளில், பத்தாண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட பல வருடங்களாக கோரி வருகிறார்கள்.

vaiko ttn

ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலையில் இருக்கின்ற பட்டதாரி ஆசிரியர் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, பணி நிரந்தரம் செய்து தை திருநாள் பொங்கல் பரிசாக 12 ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.