மெரினாவில்பேனா நினைவுச் சின்னம் - தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட மத்திய அரசு!!

 
ttn

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் விவகாரத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நலடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

kalaignar memorial

 அத்துடன் இதற்கான மாதிரி வரைவு படமும் வெளியிடப்பட்டது. உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும் பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் அதில் இடம்பெற்று இருந்தது.  கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது .

ttn

கடலுக்குள் ரூபாய் 81 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த  நினைவிடத்திலிருந்து 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரை,  360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது.  மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இதற்கு அனுமதி வழங்கிய நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

central govt

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மத்திய நிபுணர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி  தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில்  சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கை ,சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் இடர்பாடுகள் மதிப்பீட்டு அறிக்கை ,பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தயார் செய்து அனுப்ப அறிவுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்க கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.