மக்களே..!! தங்கம் வாங்க இதுதான் நேரம்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

 
gold


சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தங்கம் விலை

கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி   தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலை  தொடர்ந்து  ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விற்பனையானது.  அதன்பிறகு  தொடர்ந்து விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.  சில நாட்கள் விலை குறைக்கப்பட்டாலும்,  அடுத்தடுத்த நாட்களில் விலை இருமடங்காக  அதிகரித்து விடுகிறது.  இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கம் விலையானது சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து சிறிய அளவிலான விலை ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி இருந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்  விலை நிலவரம்

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து,  ஒரு சவரன் ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல்   22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ஒரு கிராம்  ரூ.4,838-க்கு விற்பனையாகிறது.  மேலும் சென்னையில் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்திருக்கிறது.   ஒரு கிராம்  .62 ரூபாய்  40 காசுகளுக்கும்,  1 கிலோ வெள்ளி ரூ.62,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இன்று தங்க விலை குறைந்திருப்பது  பொதுமக்கள் , குறிப்பாக நகைப்பிரியர்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.