#BREAKING பெரியார் பல்கலை., தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது - யுஜிசி அறிவிப்பு!!

 
TN

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என்று யுஜிசி அறிவித்துள்ளது.

ugc

தமிழகம் முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் , தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் 27 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.  இருப்பினும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தொலைதூர படிப்பை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை . தொலைதூர கல்வி வழியாக அதிக அளவில் வருமானம் கிடைப்பதாகவும்,  பணம் கொடுத்தால் தொலைதூர கல்வியில் தேர்ச்சியும் , சான்றிதழ் பெற முடியும் என்ற சூழல் ஏற்பட்டதன்  காரணமாகவும் இதற்கு பல்கலைகழக மானியக்குழு அனுமதி மறுத்துவிட்டது. 

TN

இதனால் தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் மூன்று படிப்புகள், சென்னை பல்கலைக்  கழகத்தால் நடத்தப்படும் 30 படிப்புகள், தமிழ் பல்கலைக்கழகத்தின் 15 படிப்புகள், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை கழகத்தால் நடத்தப்படும் 82 படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, இந்த அனுமதியை மீறி மற்ற பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியில் மாணவர்களை சேர்க்க நடத்தினால் கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும்  அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில்  பெற்ற சான்றிதழ் செல்லாது என்றும் எச்சரித்தது.

TN

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது. பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.   முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் ஆன்லைன் படிப்புகளை நடத்தி வருகிறது.  இது குறித்து விசாரிக்க ஆளுநருக்கும்,  உயர்கல்வித் துறை செயலாளருக்கும் யுஜிசி கடிதம் எழுதியுள்ளது.