ரூ.139 கோடியில் சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க அனுமதி!!

 
govt

சேப்பாக்கம் மைதானத்தை விரிவாக்க செய்ய 18 நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
 

tn

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திட்ட அறிக்கையுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேப்பாக்கம் கிரிக்கெட்  மைதான நிர்வாகம் விண்ணப்பித்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.  ரூ.139 கோடியில் 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 70 ஆயிரம் சதுர அடியாக சேப்பாக்கம் மைதானத்தை விரிவாக்கம் செய்ய அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

tn

மரங்களை வெட்ட அனுமதி இல்லை, ஒருவேளை மரங்களை பிடுங்கினால் மாற்று இடத்தில் நடவேண்டும்.புதிய கட்டுமானத் ஆல் அருகே வசிப்போர் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது, போக்குவரத்து நெரிசல் , சுற்றுச்சூழல் மாசுக்கு இடமளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 30 ஆயிரம் பார்வையாளர்கள் அமர வசதியுடன் நாட்டின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக சேப்பாக்கம் உருவாக உள்ளது.