பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் - தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

 
ass

 தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வைத்து சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் 17 மாவட்ட ஆட்சியர்களுடன் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

 தமிழகத்தில் சேலம், கோவை , பொள்ளாச்சி,  மேட்டுப்பாளையம் , ஈரோடு  உள்ளிட்ட இடங்களில் பாஜக அலுவலகம் மற்றும் பாஜக,  ஆர். எஸ். எஸ் நிர்வாகிகள் வீடு, கார் கடைகளுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.  தீ வைப்பு சம்பவங்களும் நடந்து உள்ளன.

i

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்களுடன் அந்த ஆலோசனை நடத்தியுள்ளார்.

காணொளி மூலமாக நடந்த ஆலோசனையில் உள்துறை செயலாளர் பணிந்தர ரெட்டி,  டிஜிபி சைலேந்திரபாபு,  உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன்,  மாவட்டங்களில் இருந்து காவல் கண்காணிப்பாளர்கள்,  உயர் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.  சட்டம் ஒழுங்கு கடைபிடிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு அப்பொழுது ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது.

 கோவையில் நடந்த சம்பவங்கள்  தொடர்பாக தவறான செய்திகளை பரப்ப வரும்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்திருக்கிறார்.   இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்து அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.