பீஸ்ட் படத்திற்கு பாமக கடும் எதிர்ப்பு! விஜய், சூர்யாவுக்கு கண்டிப்பு!

 
pm

 விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.  இந்நிலையில் இப்படத்திற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இப்படத்தை  வெளியிடுவதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

be

  இது குறித்து பாமக சிறுபான்மை பிரிவு சார்பாக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முனைவர் ஷேக் முகைதீன் விடுத்துள்ள அறிக்கையில்,    ‘’ஒரு விஷயத்தை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லும் , பேசப்படும் ஒரு அளவற்ற ஆற்றல் மிக்கது சினிமாத்துறை.   இதில் நல்ல விஷயங்களை,  நல்ல கருத்துக்களை சொன்னால் சிறப்பாக இருக்கும்.  ஆனால் ,  சாதி மதங்களை சமயங்களை இழிவாக காட்டும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது’’ என்று கவலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் அதுகுறித்து,  ‘’இப்படங்களில் நடிக்க பல கோடிகளை சம்பளமாகப் பெற்றாலும் தான் நடிக்கும் படத்தில் யாரையும் புண்படுத்தாமல் நடிப்பதை தாங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.   குறிப்பாக,   விஜய் பட நடிகர்கள் விஜய்,  சூர்யா போன்றோர் இதில் கவனமாக இருக்க வேண்டும்.   ரசிகர்கள் குறிப்பிட்ட மதம் சாதியை சார்ந்தவர்கள் அல்லாமல் அனைத்து மதம் சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  

su

விஜய், சூர்யாவுக்கு அனைத்து மத, சாதியினரும்  இவர்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் ,  ‘’விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டி இருக்கிறது.  அதனால் குவைத்தில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் வருகிறது.  இப்படி தகவல் பரவ விட்டால் தான் தங்கள் படம் போடும் என்று நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஒருவேளை,  இப்படத்தில் இச்செய்தி உண்மையாக இருந்தால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு வெளியிடுங்கள்.   இல்லையேல்,    இப்படம் வெளியிடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என பாமக சிறுபான்மைப் பிரிவினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.