நேற்று பிறந்தது இந்தி மொழி....வாழ்வோடும் வசதியோடும் இருக்க தமிழ் போதும் - வைரமுத்து பேச்சு

 
“As corona’s antidote I believe in pepper; That is black gold” – Lyricist Vairamuthu “As corona’s antidote I believe in pepper; That is black gold” – Lyricist Vairamuthu

வாழ்வோடும் வசதியோடும் இருக்க தமிழ், ஆங்கிலம் தெரிந்தால் போதும், இந்தி தேவையில்லை என இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். 

தமிழ் கூட்டமைப்பின் சார்பில் இன்று இந்தி திணிப்பை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார்.  இந்த போராட்டத்தில் தமிழறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: 1965-ல் நேர்ந்த இந்தி எதிர்ப்பு எழுச்சியை விட, 2022ல் தமிழர்கள் கூடுதல் எழுச்சி பெற வேண்டும். இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணிகளில் சேர முடியாது என்ற நிலையை உருவாக்க முயற்சி. பயிற்சி மொழியாக இந்தியை கொண்டு வந்து ஆங்கிலத்தை அகற்ற முயற்சி. வாழ்வோடும் வசதியோடும் இருக்க தமிழ், ஆங்கிலம் தெரிந்தால் போதும். இந்தி மொழி மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை. இந்தி மொழியை மதிக்கிறோம். அதை திணிக்காதீர்கள். தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும். இந்தியை நுழைய விட்டால் என்ன ஆகும்? முந்திரி இருக்கும் மூட்டையில், வண்டுகளை நுழைய விட்டால் முந்திரியை அழித்து விடும். நேற்று பிறந்தது இந்தி மொழி. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி புறந்தள்ளுவீர்கள்?. திராவிட வழி என்பதும் தமிழ் மொழி என்பதும் ஒன்றுதான். இவ்வாறு கூறினார்.