கள்ளக்குறிச்சியில் வன்முறை - 3ஆவது நாளாக போலீசார் குவிப்பு!!

 
tn

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தில் 3வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி என்பவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார்.  மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்ட நிலையில்,  மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி  பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

tn

நேற்று முன்தினம் இப்போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அத்துடன் அங்கு இருந்த பள்ளி வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.  பள்ளி மாணவர்களின் சான்றிதழ்களும் எரிக்கப்பட்டன. இதனால் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 376 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி வளாகத்தில் மூன்றாவது நாளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தை  சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஜூலை 31 ஆம் தேதி வரை அப்பகுதியில் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.