மு.க.ஸ்டாலினை நாங்கள் எப்போது சமரசத்திற்கு அழைத்தோம்? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

 
pon radha

பா.ஜ.கவுடன் எப்போதுமே சமரசம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், நாங்கள் எப்போது அவரை சமரசத்திற்கு அழைத்தோம் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ராம்நாதபுரத்தில் பாஜக சார்பில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.  இதேபோல் இந்த கூட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி, மாவட்ட தலைவர் கதிரவன், பொதுசெயலாளர் ஆத்மா கார்த்திக், சுப நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாங்கள் எப்போது சமரசத்திற்கு அழைத்தோம். மக்கள் பிரச்னைகளுக்கு அவருடன் சமருக்குத்தான்' நாங்கள் தயாராகியுள்ளோமே தவிர சமரசத்திற்கல்ல அமைச்சர் மீது மட்டுமல்ல எந்த மனிதர் மீதும் செருப்பு வீசக் கூடாது தான். நான் மத்திய அமைச்சராக இருந்த போது சேலம் அருகே என் மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசினர். அதை பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் ஒதுங்கி சென்றேன். அரசியல் ஆக்கவில்லை.

pon radhakrishnan

 அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கவனித்து சரியான முடிவு எடுக்க வேண்டும்.தொடர்ந்து பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மணல் நிரம்பி சீர்கெட்டுள்ளது. இதுவரை 27 மீனவர்கள் உயிரிழந்தனர். சீர்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் எல்லை பகுதிகள், கடல் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.