திமுக அமைச்சர்கள் வீடுகளிலும் விரைவில் ரெய்டு நடக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

 
pon radha

விரைவில் திமுக அமைச்சர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலம் ஊராட்சி திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமடைந்துள்ளது. தமிழகம் போதை மயமாகியுள்ளது. எந்த காரணத்தை கொண்டும், தமிழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது. ஒரு ஆண்டுக்கு மூன்று, நான்கு தேர்தல் நடக்கிறது. அதை தவிர்க்க, ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியமாகும். அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில் எங்கள் தலையீடு கிடையாது. எங்களை பொறுத்தமட்டில் அ.தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

pon radhakrishnan

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் வீடுகளில் தற்போது, வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. விரைவில் திமுக அமைச்சர்கள் வீட்டிலும், சோதனை நடக்க வாய்ப்புள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க.,வுடன் நிச்சயம் கூட்டணி இல்லை என்பதில் பா.ஜ.க தெளிவாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணி தொடரும்.இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எம்.பி., பதவி கொடுத்ததில் உள்நோக்கம் கிடையாது. அவர் ஐம்பதாண்டுகளாக தமிழ் இசையில் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி பதவி கொடுத்து கவுரவித்தது, தமிழர்களை பெருமைப்படுத்துவதாகும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்