#BREAKING பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 1,000 ரொக்கம் - முதல்வர் ஆலோசனை

 
tn

பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 1,000 வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

stalin

தமிழர் திருநாளான தை திருநாள் பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் சமைக்க தேவையான பொருட்கள், முழு  கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டது.

pongal

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 1,000 வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் சக்கரபாணி,  பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு என்னென்ன பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் வழங்குவது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.