"பொன்பதர்கூடம் நெல் கொள்முதல் நிலையம்" - மநீம முன்வைத்த முக்கிய கோரிக்கை!!
பொன்பதர்கூடம் நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மநீம வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு மாவட்டம் பொன்பதர்கூடம் பகுதியில் சமீபத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவின்போது சம்பிரதாயத்துக்காக சில நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், இந்நிலையமானது இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 54 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இங்கு நெல் விற்பனை செய்யலாம் என்ற நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் நெல் அறுவடை செய்துவிட்டு, கொள்முதல் நிலையம் எப்போது செயல்படும் என்று காத்திருக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொன்பதர்கூடம் பகுதியில் சமீபத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவின்போது சம்பிரதாயத்துக்காக சில நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், இந்நிலையமானது இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.(1/3) #MakkalNeedhiMaiam #KamalHaasan pic.twitter.com/ukYQJ8I4rj
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) September 13, 2022

உடனடியாக இதனைச் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து, நெல் கொள்முதல் பணிகளைத் தொடங்க வேண்டும். இதேபோல, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் செயல்படாமல் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.