#Breaking பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

 
anna

நாளை நடைபெறவிருந்த பி.இ. பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Ponmudi

தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக்,  பி.ஆர்க்  படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.  இதில் கலந்து கொள்வதற்காக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் காலியாக உள்ளன. அத்துடன் பொதுப் பிரிவு கலந்தாய்வானது நாளை தொடங்கி நான்கு சுற்றுக்களாக நடைபெற இருந்தது.  சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5%  இட ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது.

Anna univ

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்க இருந்த BE பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். காலியிடங்களை தடுக்கவும் , மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமத்தை தடுக்கவும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியுள்ள அவர்,  நீட் தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களுக்கு பிறகு கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தேசிய தேர்வு முகமையுடன் பேசி வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில் , உயர்கல்வித்துறை தற்போது பரிசீலனை செய்து  பொது பிரிவு பொறியியல் கலந்தாய்வை  ஒத்தி வைத்துள்ளது.  நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே பொறியியல் கலந்தாய்வு நடத்தினால் தேர்வு முடிவுகள் வெளியான பின் பல இடங்கள் காலியாகும் சூழல் ஏற்படும் என்பதால் இம்முடிவை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.