தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

 
Thermal plant

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்  இன்று முதல் மீண்டும் ஐந்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள  அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒரு அலகில் 210 மெகாவாட் என 5 அலகுகளில் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் கடந்த சில மாதங்களாக நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில  அலகுகள் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நான்கு அலகுகள்  நிறுத்தப்பட்டு மூன்றாவது அலகில் மட்டுமே நாளொன்றுக்கு 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் 7நாட்களில் 7350 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பதில் 1470 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், மின்சக்தி மற்றும் காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்களிலும்  ஞாயிற்றுக்கிழமை  முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.  இதனால் அனல் மின் நிலையத்தில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.   விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதால், சுமார் ஒரு லட்சம் டன் நிலக்கரி அனல்மின் நிலையத்தில் தற்போது கையிருப்பு உள்ளதாகவும் அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்