வேலைநிறுத்தம், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து இன்று கடையடைப்பு.. விசைத்தறி உரிமையாளர்கள் அறிவிப்பு..

 
விசைத்தறி உரிமையாள்ர்கள் வேலைநிறுத்தம்

ஒப்பந்த வடிவிலான கூலி உயர்வை  வழங்க வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் விசைத்தறிகள் அதிகம் செயல்பட்டு வரும் மாவட்டங்களில்  கோவை,  திருப்பூர் ஆகியவை பிரசித்தி பெற்றவை.  ஆனால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்று  புகார்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்துயும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

ஆகையால்  கடந்த ஜனவரி 9 ம் தேதி முதல் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வரை 48வது நாளாக வேலைநிறுத்ததை தொடர்ந்தனர். அதன்பின்னர் அமைச்சர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதில், சில சங்கங்கள் வாபஸ் பெற்றன.  இருந்தபோதிலும் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என மேலும் சில சங்கங்கள் வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன.

கடையடைப்பு

மேலும் பிப்ரவரி 22 முதல் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,   நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக  பிப்ரவரி 23  தொடங்கியது.  இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு விசைத்தறியாளர் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.  இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று  பதுவம்பள்ளி, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி, சாமளாபுரம், காரணம்பேட்டை, பருவாய்  ஆகிய  பகுதிகளில் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது.