தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை!!

 
govt

சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை உணவு பொருட்களை தள்ளுவண்டி கடை மற்றும் தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள் 100 ரூபாய் செலுத்தி பதிவு சான்றிதழ் பெற வேண்டுமென்ற நடைமுறை அமலில் உள்ளது. தெருவில் விற்பவர்கள் முதல் நட்சத்திர விடுதி வரை உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் என்பது மிக முக்கியம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

stalin

இந்த சூழலில் சாலை ஓரத்தில் தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதியுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திடவும்,  இத்திட்டத்தினை மிதிஆண்டிலேயே தொடர்ந்திட உரிய ஆணை வழங்குமாறு தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோர தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தனது அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

tn

ஒவ்வொரு மண்டல வார்டு அளவில் நடைபெறும் போது ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை உள்ள போது மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அருகில் விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும்,  கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது அரசாணையில் கூறியுள்ளது.