கோவில் வாசலில் பூசாரி வெட்டிக்கொலை! பெண் தற்கொலையின் முன்விரோதமா?

 
p

கோவில் பூசாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்து இருக்கிறார் கூலித்தொழிலாளி.   சேலம் மாவட்டத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 சேலம் மாவட்டத்தில் எடப்பாடி அடுத்த அரசிராமணி செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்.  இவரது மனைவி மங்கம்மாள். இத் தம்பதிக்கு ஆனந்தன் என்கிற மகனும் சசிகலா என்ற மகளும் உள்ளனர்.  இருவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில்  ஆனந்தன் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார்.

அரசிராமணி செட்டிபட்டி சரபங்கா நதி ஆற்றங்கரையோரம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக சொந்தமாக அம்மன் சிலை அமைத்து கோவிலில் பேயோட்டுதல் , பில்லி சூனியம் நீக்குதல் என்று செய்து பூசாரியாக இருந்து வருகிறார். 

t

 இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அரசிராமணி தைலங்காடு பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் என்ற கூலித்தொழிலாளி,  அரிவாளை எடுத்து சென்று கோவில் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த பூசாரியை வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்தார்.

 சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

போலீசில் சரணடைந்த காத்தவராயனின் மனைவி பாப்பாத்தி,  கடந்த 5 வருடத்திற்கு முன்பாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  இதற்கு பூசாரி ஆனந்தன் தான் காரணம் என்று போலீஸில் சொன்னதாகவும் தெரிகிறது.  இதனால் காத்தவராயனுக்கு ஆத்திரம் உண்டாகி இருக்கிறது.  மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  வேறுவேறு வேட்பாளர்களுக்கு இரண்டு பேரும் ஆதரவு தெரிவித்துவிவந்ததாகவும் இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும்,  பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.