டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்.. காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை..

 
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ  தேர்வுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாளாக உள்ள நிலையில், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் காலக்கெடுவை வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான  ஊழியர்கள் மற்றும்  அலுவலர்கள்தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.   அந்தவகையில் இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு  நடைபெற உள்ளது.   நடப்பாண்டுக்கான  குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு   பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்! திமுக அரசு அதிரடி

இன்று   ( மார்ச் 23-ம் தேதி ) விண்ணப்பிக்கக  கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்  டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யமுடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.  இன்றே  கடைசி நாள் என்பதால்  பல தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமால் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.   

இதனால்  கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள தேர்வர்கள்,   டிஎன்பிஎஸ்சி இணையதள கோளாறை சரிசெய்ய வேண்டும் என்றும்,  குரூப் 2 , குரூப் 2ஏ  தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.