"இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை" - சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

 
tn

இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ilaiyaraj-a3

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா , ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம்,  அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி,   அனிதா சுமத் , இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமையுண்டு என்று உத்தரவிட்டார்.  தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார் இளையராஜா.  இந்த மனுவை நீதிபதி துரைசாமி , நீதிபதி தமிழ்செல்வி அமர்வு விசாரித்தது.ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

high court

இந்நிலையில் இளையராஜா பாடல்கள் எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஆணையிட்டுள்ளது.  ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா புகார் அளித்த நிலையில் இளையராஜா தரப்புக்கு தற்போது நீதிமன்றம் உத்தரவின் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனம் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வருகிற மார்ச்  21-ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.