பருவம் தவறி பெய்த மழை.. சேதமடைந்த பயிர்கள்.. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குக..- ஜி.கே.வாசன்

 
ஜிகே வாசன்

பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஒரிரு நாள்களுக்கு முன்னர் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்து மிகவும் சேதம் அடைந்துள்ளது .  காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் எக்டேர் தற்பொழுது பெய்த மழையில் பாதிப்படைந்துள்ளது .

மழை

சென்ற மாதம் பெய்த மழையில் நெற்பயிர்கள் முழ்கி சேதம் அடைந்தது . அதில் இருந்து தப்பி தேறிய மீதம் உள்ள நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த பொழுது தற்பொழுது பெய்த மழையில் அவை நிலத்தில் சாய்ந்து மிகவும் சேதம் அடைந்துள்ளது . இது விவசாயிகளை மிகவும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது . பல்வேறு இடங்களில் சம்பா தாளடி அறுவடைக்கு பின் தாளில் விதைக்கப்பட்ட உளுந்து , பச்சை பயிறு மற்றும் எள்ளு போன்றவை தண்ணீரில் முழ்கி முற்றிலும் அழுகி போய்விட்டது .

விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பில் இருந்து இந்த கோடை பயிர் தான் அவர்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும் அதுவும் தற்பொழு முற்றிலும் அழிந்தது மிகவும் கவலைக்குரியது . தற்பொழுது அறுவடைக் காலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேரடி நெல்முதல் நிலையங்கள் திறந்து இருக்கிறது . அவற்றில் பெரும்பாலன இடங்களில் விற்பனைக்கு வரும் நெல்மணிகளையும் , கொள்முதல் செய்த நெல்மணிகளையும் மழையில் இருந்து காக்கும தார்பாய்கள் இல்லாமல் இருக்கிறது .

கனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

மேலும் நெல்கொள்முதல் செய்வதற்கு ஆன்லைனின் பதிவு செய்ய கல்வியறிவு அதிகம் இல்லாமலும் , கணிணி வசதி இல்லாமலும் விவசாயிகள் அவதியுறுகின்றனர் . அதனால் சிறிய அளிவில் விற்பனை செய்பவர்கள் கூட பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது . இன்னிலையை மாற்ற வேண்டும் . பழைய நடைமுறையையே திரும்ப கொண்டு வந்து , அரசு நெல்கொள்முதல் நடைமுறையை எளிமை படுத்த வெண்டும் .

டெல்டா மாவட்டங்களான திருவாரூர் , நாகப்பட்டிணம் , தஞ்சாவூர் , மயிலாடுதுறை , புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பருவம் தவறி பெய்த மழையால் பெரிதும் பாதித்து இருக்கிறது . அரசு உடனடியாக சேதம் அடைந்த பகுதிகளை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீட்டை தாமதம் இல்லாமல் அளிக்க வேண்டும் . அதோடு காப்பீடு நிறுவனங்களும் காப்பீட்டு தொகையை அளிக்க வேண்டும் . இதற்கு மத்திய , மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குக