புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

 
pondy

புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால், சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணைநிலை ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவையில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட  நிலையில் ரூ.9,709 கோடி (94%) செலவிடப்பட்டுள்ளதாக கூறினார். 

pondy

இந்நிலையில், சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும், ஆளுநர் உரையின் மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறும் எனவும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் அறிவித்தார்.புதுவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.