சி.வி. சண்முகம் மாநிலங்களவை எம்.பி. ஆனது எப்படி செல்லும் ? - புகழேந்தி கேள்வி

 
pugazhendi

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்றால், சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் எம்.பி.யானதும் செல்லாத என அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த வியாழக்கிழை சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப் படுவதாகவும் மீண்டும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடும் என்றும் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதனிடையே தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.  இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களின் பதவி காலாவதியாகிவிட்டதாக கூறினார்.  

Pugazhendi

இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்றால், சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் எம்.பி.யானதும் செல்லாது என அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அதிகாரத்தை பயன்படுத்தியே சண்முகம், தர்மர் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி., ஆகி இருக்கின்றனர் என்பதை மறந்து விட்டார்கள் எனவும், ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்றால், எம்.பி., ஆனதும் செல்லாது எனவும், இதற்காக நான் நீதிமன்றத்திற்கு செல்வேன் எனவும் கூறினார். பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தி இருக்கின்றனர் எனவும், போலீசார் ஏமாந்திருந்தால், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் தாக்கப்பட்டு இருப்பார்கள் எனவும், பொதுக்குழு விவகாரத்தால், பன்னீர்செல்வத்துக்கு அனுதாப அலை உருவாகியிருக்கிறது. என்றும் கூறினார். ஜூலை 11ல் பொதுக்குழு கூடுவதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறினார்.