சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பஞ்சாப் தீவிரவாதி..

 
சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பஞ்சாப் தீவிரவாதி..

சென்னை விமான நிலையத்தில்  பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த  26 வயது இளைஞர் ஹா்ப்ரீத் சிங் .  கடந்த 2020 ஆம் ஆண்டு  ஹர்ப்ரீத் சிங்  மீது  பஞ்சாப்  காவல்துறையினர்   தேசத்துரோக வழக்கு, மற்றும் தீவிரவாத செயல்கள் தொடர்பான வழக்குகளான 127 A உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து,  அவரை கைது செய்ய தேடி வந்தனர். ஆனால் போலீஸிடம் சிக்காமல் இருக்க  வெளிநாட்டிற்குச் தப்பிச் சென்ற அவர்,   தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.  அதன்பிறகு பாஞ்சாப் மாநில காவல்துறை  டிஜிபி,   தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக ஹர்ப்ரீத் சிங்கை அறிவித்தார்.  அதனைத்தொடர்ந்து அவர் மீது   அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும்  LOC போடப்பட்டிருந்தது.

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பஞ்சாப் தீவிரவாதி..

இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் விமானம்  ஒன்று நேற்று சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தது,   அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம்  சென்னை விமான நிலைய  அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.  அப்போது தான் ஹர்ப்ரீத் சிங் பிடிபட்டார். ஒவ்வொரு பயணிகளாக சோதிக்கும்போது, ஹர்ப்ரீத் சிங்கின்  ஆவணங்களையும் பரிசோதித்தனர்.  அப்போது  அவர் கடந்த 3 ஆண்டுகளாக  வந்த குற்றவாளி என்பதும்,  அவர் மீது  பஞ்சாப் காவல் துறையினர்   தீவிரவாத தடுப்புச் சட்டம்  மற்றும் தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்திருந்ததும்  தெரியவந்தது.

கைது

இதையடுத்து   ஹா்ப்ரீத் சிங்கை  வெளியே விடாமல்  ஒரு அறைக்குள் பிடித்து வைத்திருந்த  அதிகாரிகள்,   போலிஸாருக்கு  தகவல் கொடுத்தனா்.  பின்னர் வந்த பஞ்சாப்  காவல் துறையினர் ஹா்ப்ரீத் சிங்கை கைது செய்து ,  பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு  கொண்டு சென்றனர். கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் மாநில  தீவிரவாதி சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.