அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை!!

 
rain

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில்  11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

rain

தமிழக பகுதிகளின் மேல் நிலவும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் , திருப்பூர், தென்காசி ,விருதுநகர் ,சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  நாளை  நீலகிரி ,கோவை ,தேனி, திண்டுக்கல், திருப்பூர் ,தென்காசி, விருதுநகர் ,சேலம் ,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Rain
 

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.