அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழை!!

 
rain

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

rain

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்குகிறது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும்  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 29ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

rain

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழையும், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.