தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை!!

 
rain

கேரள கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தென்தமிழகம், தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27ம் தேதி தென்தமிழகம் ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, நீலகிரி ,கோயம்புத்தூர் ,திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.28ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸில் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில்  3 சென்டிமீட்டர், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் ,தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 2 சென்டிமீட்டர் மழையும்,   சாத்தான்குளம் ,திருச்செந்தூர், பரமக்குடி ,தொண்டி ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.