தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை!!

 
rain

வட உள் கர்நாடகாவில் இருந்து தென்தமிழகம் மேல் நிலவும் வளிமண்டலத்தில் சுழற்சியின் காரணமாக இன்று நீலகிரி ,கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ,தேனி, விருதுநகர் ,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

நாளையின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 25-ஆம் தேதி தென் கடலோர தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

26ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மற்றும் அதனை ஒட்டி உள்மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.  மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.