அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!!

 
rain

அடுத்த 3 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் , நாளையும்  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் வருகிற 7 மற்றும் 8ஆம் தேதிகளில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

Rain

இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் நாகை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது . இன்று காலை முதலே நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.