இந்த 4 மாவட்டங்களில் மழை...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
rain

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக நேற்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ,தென்காசி ,திருநெல்வேலி ,ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  மிதமான மழை பெய்தது. வருகிற 28 மற்றும் ஒன்றாம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது

rain

இந்நிலையில் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும்; காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.