சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

 
rajini

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73ஆவது பிறந்தநாளையொட்டி ஓபிஎஸ், சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர். 

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்த் வழக்கம் போல இந்தாண்டும் சென்னையில் இல்லாத நிலையில் தனது கணவரின் பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய, லதா ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.


இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார். 



அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டு, தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்தஇனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.