சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து!!

 
tn

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன.  இதில் இரண்டாவது  டவரில்  அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து நடந்ததாக தெரிகிறது. இதனால் அறுவைசிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீ விபத்தால் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  4 தீயணைப்பு வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்,  மருத்துவ உபகரணங்கள்,  ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெளியே எடுத்துச் செல்லும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

tn

முதற்கட்ட விசாரணையில் குப்பையின் மூலம் தீ விபத்து ஏற்பட்டது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று தீயணைப்பு மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . தீயணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.