நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அரிய வாய்ப்பு.. இதை பயன்படுத்திக்கோங்க..

 
நீட் தேர்வு

நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள நாளை மறுநாள்  ( மே 27ம் தேதி ) வரை தேதிய தேர்வு முகமை  அவகாசம் அளித்துள்ளது.  

நீட் தேர்வு

இந்தியாவில் மருத்துப படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்  நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்தவகையில் வரும் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு  நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த இளங்களை மருத்துவப் படிப்புக்கான  நீட் நுழைவுத் தேர்வுக்கு கடந்த எப்ரம் மாதம் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.  neet.nta.nic.in என்ற இணையதளத்தில்  அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை செலுத்தி,  விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: போலீசில் புகார் அளித்த மருத்துவக் கல்லூரி!

கடந்த மே 6 ஆம் தேதி  தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர்  15-ந் தேதி வரை நீடித்து உத்தரவிட்ட  நிலையில், மீண்டும்  மே 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளான 20-ந்தேதி அன்று நாடு முழுவதிலும் ஏராளமாணா மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.  இந்த நிலையில், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்தம் செய்துகொள்ள, விண்ணப்பதாரர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி விண்ணப்பதாரர்கள் தங்களது  ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில்  நாளை மறுநாள்  ( 27-ந்தேதி இரவு 9 மணி வரை) வரை திருத்தங்களைச்  செய்துகொள்ளலாம்.  அதன்பிறகு, விண்ணப்பத்தில்  எந்தத் திருத்தமும் செய்ய முடியாது என்பதால்,  தேர்வர்கள் மிக கவனமாக திருத்தம் செய்ய வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறுவித்துள்ளது.