தமிழகத்தில் ஆசிரியர்களின் கோடை விடுமுறை குறைப்பு..

 
தமிழகத்தில் ஆசிரியர்களின் கோடை விடுமுறை  குறைப்பு..


தமிழகத்தில்  அரசு  மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளில் ஆசிரியர்களின் கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொளுத்தும் வெயில்.. பஞ்சாப்பில் மே.14 முதல்  கோடை விடுமுறை.. முதல்வர் பகவந்த மான் அறிவிப்பு..

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள், கடந்த மே 13 ஆம் தேதியுடன் முடிவடைந்தன.  இதனைத்தொடர்ந்து  தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி முதல்  ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.  கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   அந்தவகையில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆதிரியர்களுக்கும்  மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 

ஆசிரியர்கள்

இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வருகிற 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்குமாறு ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் உத்தரவிட்டிருக்கிறார். கோடை விடுமுறை குறைக்கப்பட்டது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு  தெரிவித்து வரும் அவர்கள், பள்ளிகள் திறந்த பிறகு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.