ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான மாணவர் விடுவிப்பு!!

 
ttn ttn

சென்னை ஐஐடியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கம் டைமண்ட் ஹார்பர் பகுதியை சேர்ந்த 30 வயதான மாணவி ஒருவர் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பை கடந்த 2018ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  அப்போது அவரை   உடன் படித்துவந்த கிங்ஷீக்தேவ் சர்மா என்பவர் காதலிப்பதாக கூறி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் அவருடன் சேர்ந்து அவரது நண்பர்கள் சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சவுர்வ தத்தா, அய்யன் பட்டாச்சார்யா உள்ளிட்டவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

iit

 இது குறித்து மாணவி ஐஐடி பேராசிரியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏற்படாத நிலையில்,  தேசிய மகளிர் ஆணையத்திலும் , கோட்டுர்புரம்  காவல்நிலையத்திலும் மாணவி கடந்த மார்ச் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் அளித்தார்.  மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட நிலையில்,  சர்மா உள்ளிட்ட 8 பேர் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஆனால் இதுதொடர்பாக  யாரும் கைது செய்யப்படவில்லை.

sexually abuse

இதைத்தொடர்ந்து மாதர் சங்கத்தின் வலியுறுத்தலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது . சென்னை மயிலாப்பூர் காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான சர்மாவை பிடிக்க, மே. வங்கம் விரைந்த நிலையில் கொல்கத்தாவில் பதுங்கி இருந்த சர்மா நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் டைமண்ட் ஹார்பர்   காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று போக்குவரத்து வாரன்ட் பெற்று சென்னைக்கு  அழைத்து வர போலீசார் திட்டமிட்டனர்.

arrest

இந்நிலையில்  ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட  மேற்கு வங்கத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் கிங்ஷீக்தேவ் சர்மா  ஏற்கனவே ஜாமீன்  பெற்றதால் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வர தீவிர நடவடிக்கை எடுத்துவந்த சூழலில், கடைசி நேரத்தில் இந்த வழக்கில் முன்ஜாமீன் வாங்கியதற்கான உத்தரவை கிங்ஷீக்தேவ் சர்மா 
 காண்பித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.