தெருக்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கம் - சென்னை மாநகராட்சி அதிரடி

 
ச

 சென்னையில் உள்ள தெருக்களுக்கு இருக்கும் சாதிப்பெயரை மாற்றி வருகிறது மாநகராட்சி.  சாதி பெயரில் இருந்த குளங்களின் பெயர்களை மாற்றம் செய்ததற்கு கிடைத்த வரவேற்பினை அடுத்து சாதி பெயரில் இருக்கும் தெருக்களின் பெயர்களை மாற்றி வருகிறது மாநகராட்சி. 

 கடந்த ஆண்டில் அம்பத்தூர் மண்டலம் 82 ஆவது வார்டு மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம் 192 வது வார்டுகளில் இருந்த வண்ணான் குளம் என்ற பெயர் வண்ணக்குளம் என மாற்றம் செய்யப்பட்டது . . முதல்வரின் உத்தரவால் மாநகராட்சி எடுத்த இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்தது இதை அடுத்து சென்னையில் உள்ள தெருக்களில் குறிப்பிட்ட சாதிகளை குறிப்பிடும் வகையில் உள்ள பெயர்களை மாற்றி மாற்றவும் அடுத்த கட்ட நடவடிக்கை மாநகராட்சி தொடங்கியது.

ச்ட்

 சென்னை  மாநகராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.  அவ்வப்போது சாதி பெயர்களுடன் இருந்த தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தலைவரின் பெயருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு அந்த தலைவர்களின் பெயர்களை மட்டுமே மாற்றப்பட்டு  வருகிறது.

இந்நிலையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பணிகளை செய்து வருகிறது.  அதன்படி தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

ச்

 சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் இளச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெயர் பலகைகளில் இடம் பெறுகின்றன.   இந்த பணியுடன் சேர்த்து தெருக்களுக்கு சாதிப் பெயர்கள் இருந்தால் அவற்றையும் நீக்கும் பணியை தொடங்கி இருக்கிறது சென்னை மாநகராட்சி.   இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் 171 வது வார்டில் இருக்கும் தெருவின் பெயரை சென்னை மாநகராட்சி மாற்றி அமைத்திருக்கிறது. 

 13 வது மண்டலம் 171 வது வார்டு இருக்கும் ஒரு தெருவுக்கு அப்பாவோ கிராமணி இரண்டாவது தெரு என்று இருந்தது.  இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.  இதை அடுத்து இந்த தெருவின் பெயரை சென்னை மாநகராட்சி தற்போது அப்பாவு (கி) தெரு என்று மாற்றி அமைத்திருக்கிறது.   இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு  எழுந்திருக்கிறது.