ஆன்லைன் ரம்மிக்கு தடை - முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது பரிந்துரை குழு!

 
tn

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு அறிக்கையை சமர்ப்பித்தது.

tn

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட விபரீதங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனால் ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும்,  இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி  கே. சந்துரு தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது.

tn
இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு அறிக்கையை சமர்ப்பித்தது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். பரிந்துரைகளின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் நிலையில் அவசர சட்டத்தில் இடம் பெற வேண்டியவற்றை பரிந்துரைகளை  முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்  நீதியரசர் சந்துரு குழு அறிக்கையை சமர்ப்பித்தது.  இந்த அறிக்கைமீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர்சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, இ.கா.ப. ஆகியோர் இடம்பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது